

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் புதிதாகத் திறக்கப்பட்ட கடலோர சாலைப் பாலத்தில், நேற்று காலை 5 மணியளவில் பிஎம்டபிள்யூ கார் ஒன்று, மரைன்டிரைவ் பகுதியிலிருந்து ஹாஜி அலி நோக்கி சென்று கொண்டிருந்தது. லாலா லஜபதிராய் கல்லூரிக்கு எதிரே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து் தடுப்புச் சுவரின் மீது மோதி பாலத்திலிருந்து கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த் விபத்தில் காரில் பயணம் செய்த ஷனாய் கஜ்ஜல் (21), திர்யா சேத் (17) மற்றும் அடையாளம் தெரியாத மற்றொருவர் என மூவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.