கேரளாவில் பாலியல் வழக்கால் வாழ்க்கையை தொலைத்த 3 கன்னியாஸ்திரிகள் புதிய அத்தியாயத்தை தொடங்கி சாதனை

கேரளாவில் பாலியல் வழக்கால் வாழ்க்கையை தொலைத்த 3 கன்னியாஸ்திரிகள் புதிய அத்தியாயத்தை தொடங்கி சாதனை
Updated on
1 min read

கோட்​ட​யம்: பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்​டப் போராட்​டத்தை எதிர்​கொண்ட 3 கன்​னி​யாஸ்​திரி​கள் சிறிய ஆடைத் தொழில் மூலம் தங்​களது வாழ்க்​கை​யில் புதிய அத்​தி​யா​யத்​தைத் தொடங்​கி​யுள்​ளனர்.

கேரளா​வின், கோட்​ட​யம் மாவட்​டத்​தி​லுள்ள குரு​விலங்​காடு மடத்தைச் சேர்ந்த கன்​னி​யாஸ்​திரி ஒரு​வர், ஜலந்​தர் மறை​மாவட்ட ஆயராக இருந்த பிராங்கோ முலக்​கல், தன்னை 2014 முதல் 2016 வரையி​லான கால​கட்​டத்​தில் 13 முறை பாலியல் வன்கொடுமை செய்​த​தாக 2018 ஜூன் மாதம் போலீ​ஸில் புகார் அளித்​தார்.

திருச்​சபை நிர்​வாகம் நடவடிக்கை எடுக்​காத​தால், பாதிக்​கப்​பட்ட கன்​னி​யாஸ்​திரிக்கு ஆதர​வாக, மேலும் 2 கன்​னி​யாஸ்​திரி​கள் கொச்​சி​யில் வீதி​யில் இறங்கி போராட்​டங்​களை நடத்​தினர். அதன் பிறகு, 2018 செப்​டம்​பரில் பிராங்கோ முலக்​கல் போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். பின்​னர், அவருக்கு ஜாமீன் வழங்​கப்​பட்​டது. இந்​தி​யா​வில் பாலியல் பலாத்​கார வழக்​கில் கைது செய்​யப்​பட்ட முதல் கத்​தோலிக்க ஆயர் இவர் ஆவார்.

இந்​நிலை​யில், 3 கன்​னி​யாஸ்​திரி்களும் சேர்ந்து ஆடைத் தொழில் மூலம் தங்​களது வாழ்க்​கை​யில் புதிய அத்​தி​யா​யத்​தைத் தொடங்​கி​யுள்​ளனர். இதுகுறித்​து, அவர்​கள் கூறிய​தாவது: ஆயர் பிராங்கோ மீதான குற்​றச்​சாட்டு வெளி​யானதையடுத்​து, மடத்​தில் எங்​களுக்கு வழங்​கப்​பட்டு வந்த நிதி​யுதவி நிறுத்​தப்​பட்​டது.

இதனால், உணவு, உடை, மருந்து ஆகிய​வற்றை வாங்க, வேலை செய்து சம்​பா​திக்க நாங்​கள் முடிவு செய்​தோம். எங்​களில் இரு​வர் சமூகப் பணி​யில் முதுகலைப் பட்​டம் பெற்​றுள்​ளனர். வேலைக்​காக முயற்சி செய்தபோது சட்ட வழக்​குடன் இருந்த தொடர்பு காரண​மாக, வேலை கிடைப்​பது கடின​மாக இருந்​தது.

அப்​போது​தான் வேலை கிடைப்​பது எளிதல்ல என்​ப​தைப் புரிந்​து​கொண்​டோம். எனவே, யாராலும் எங்​களிட​மிருந்து பறிக்க முடி​யாத ஒன்​றைச் செய்ய வேண்​டும் என்று நினைத்​தோம். குரு​விலங்​காடு மடத்​தில் அதற்​கான விடை ஒரு தையல் இயந்​திரம் மூலம் கிடைத்​தது. கற்​றுக் கொள்​வதற்​காக தொடங்​கிய தையல் பயிற்​சி, தற்​போது எங்​களது வாழ்​வா​தா​ர​மாக மாறி​யுள்​ளது.

தற்​போது, ஆடைத் தொழிலை தொடங்கி உள்​ளோம். தொடக்​கத்​தில் இந்​தத் தொழில் சிறிய அளவிலேயே இருந்​தது. நன்கு அறி​முக​மானவர்​களிட​மிருந்தே பெரும்​பாலான ஆர்​டர்​கள் வந்​தன. பலர் எங்​களுக்கு ஆதரவு அளித்​தனர். அவர்​களின் பரிந்​துரை​யின் பேரில், எங்​களது தொழிலுக்கு ‘ஸ்​டாண்ட் பை மீ’ என பெயர் சூட்​டி​யுள்​ளோம்.

தற்​போது நைட்​டிகள், சுடி​தார்​கள், பைகள், மேஜை விரிப்​பு​கள் மற்றும் மேஜை அலங்​காரத் துணி​கள் உள்​ளிட்​ட​வற்றை தயாரித்து வரு​கிறோம். மேலும், இரு பணி​யாளர்​களை​யும் வேலைக்கு அமர்த்​தி​யுள்​ளோம். இவ்​வாறு அவர்​கள் கூறினர்​.

இதற்​கிடையே, உள்​ளூர்​ நீதி​மன்​றத்​​தால்​ பிராங்கோ விடு​தலை செய்​யப்​பட்​டதை எதிர்​த்​து ​பா​திக்​கப்​பட்​ட அந்​த கன்​னி​யாஸ்​திரி கேரள உயர்​ நீதி​மன்​றத்​தில்​ மேல்​முறையீடு செய்​துள்​ளார்​.

கேரளாவில் பாலியல் வழக்கால் வாழ்க்கையை தொலைத்த 3 கன்னியாஸ்திரிகள் புதிய அத்தியாயத்தை தொடங்கி சாதனை
சாதகமான சலுகை வழங்கினால் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் இறுதியாகும்: பியூஷ் கோயல் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in