அமெரிக்கா - ஈரான் போரால் 26,000 விமான சேவை ரத்து

அமெரிக்கா - ஈரான் போரால் 26,000 விமான சேவை ரத்து
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு ஆசிய போர் காரண​மாக 26,000 சர்​வ​தேச விமான சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டுள்​ள​தாக மக்​களவை​யில் மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

மக்​களவை​யில் காங்​கிரஸ் உறுப்​பினர் ஆன்டோ அந்​தோனி எழுப்பிய கேள்வி ஒன்​றுக்கு சிவில் விமானப் போக்​கு​வரத்து துறை இணை அமைச்​சர் முரளிதர் மோஹோல் எழுத்​துப்​பூர்​வ​மாக அளித்த பதிலில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த பிப்​ர​வரி மாத இறுதியில் அமெரிக்​கா, ஈரான் இடையே போர் மூண்​டது. இதையடுத்​து, மேற்கு ஆசிய வான் பகு​தி​யில் விமானங்​கள் பறக்க கட்​டுப்​பாடு விதிக்​கப்​பட்​டது.

இதனால் ஜூலை 20-ம் தேதி வரை​யில் இந்​திய விமான நிறுவனங்கள் சுமார் 26,000 சர்​வ​தேச விமான சேவை​களை ரத்து செய்​துள்​ளன. மேலும், பல விமானங்​கள் மாற்று வழிகளில் திருப்பி விடப்​பட்​டும், தாமத​மாக​வும் இயக்​கப்​பட்டு வரு​கின்றன .

இதற்கிடையே இந்​தப் போர் காரண​மாக கச்சா எண்​ணெய் விலை உயர்​வால் விமான எரிபொருள் விலை​யும் உயர்ந்​தது. இது​போன்ற நெருக்​கடி​யால் விமான நிறு​வனங்​களுக்கு கணிச​மான வரு​வாய் இழப்பு ஏற்​பட்டு வரு​கிறது. இருப்​பினும், சேவை​களைத் தொடரத் தேவை​யான நடவடிக்​கைகளை விமான நிறு​வனங்​கள் எடுத்து வரு​கின்​றன. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

அமெரிக்கா - ஈரான் போரால் 26,000 விமான சேவை ரத்து
கேரளாவில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு: தேடப்பட்டு வந்த பிஎஃப்ஐ நிர்வாகி கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in