மதம் மாறிய இந்துக்களை மீட்டெடுக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு

மதம் மாறிய இந்துக்களை மீட்டெடுக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு
Updated on
1 min read

பிற மதத்தினர் கூறிய ஆசை வார்த்தகைகளால் கவரப்பட்டு மதம் மாற்றப்பட்ட இந்துக்களை மீட்டெடுக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவ்வாறாக மதம் மாறிய இந்துக்களை மீண்டும் தாய் மதுத்தை மீட்டெடுப்பதில் எந்த தவறும் இல்லை என்றார். இருப்பினும் சங் பரிவார் அமைப்புகள் பயன்படுத்திய கர் வாப்ஸி என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை.

கொல்கத்தாவில் விஷ்வ ஹிந்து பரிசத் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் பேசிய அவர், "மதமாற்றம் தவறு என பேசுபவர்கள் ஏன் மதமாற்ற தடுப்புச் சட்டத்தை அமல்படுத்த ஒத்துழைப்பதில்லை" என கேள்வி எழுப்பினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீண் டொகாடியா, மேற்குவங்கத்துக்குள் வங்கதேசத்திலிருந்து மக்கள் ஊடுருவுவதை தடுக்க வேண்டும். ஏனென்றால் அவ்வாறாக ஊடுருபவர்கள் நம் நாட்டை ஆக்கிரமிக்கும் எண்ணத்துடனேயே நுழைகின்றனர். இதை தடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், ஒரே ஒரு பசுகூட வதைக்கப்பட அனுமதிப்பதில்லை என அனைவரும் உறுதி ஏற்போம் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in