

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ‘‘அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சித்து வருகின்றனர்” என குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, ‘‘காங்கிரஸ் அரசுக்கு எதிராக எந்த சதியும் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. தேர்தலுக்கு முன்பாக அக்கட்சியை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர தயாராக இருக்கிறார்கள்” என்றார். இதற்கு முதல்வர் டி.கே.சிவகுமார், “யார் வந்தாலும் உடனே பாஜகவில் சேர்த்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை” என்று பதிலளித்துள்ளார்.