

ராஜஸ்தானில் நடைபெற்று வரும் புஷ்கர் கால்நடை திருவிழாவிலிருந்து 2 வெளி நாட்டவர்களுடன் புறப்பட்ட ராட்சத பலூன் (ஹாட் ஏர் பலூன்) திசை மாறி சென்று சிறை அருகே தரையிறங்கியது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து, ஏர் பலூன் களை வானில் பறக்க விடுவதற்காக தனி யார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த அனு மதியை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்தது.
இந்த ஆண்டுக்கான கால்நடை திருவிழா வில் நேற்று முன்தினம் வானில் பறந்து சென்ற 3 ஏர் பலூன்கள் திசை மாறிச் சென்றன. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த 2 பெண் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு பைலட் டுடன் சென்ற பலூன், அஜ்மீரில் உள்ள மத்திய சிறை வளாகத்துக்கு அருகே தரை இறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல் துறை கண்காணிப் பாளர் மகேந்திர சிங் கூறும்போது, “இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருகி றோம். விதிகள் மீறப்பட்டிருந்தால் சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கூடுதல் ஆட்சியர் தலைமையில் 3 நபர் விசாரணைக் குழுவை மாவட்ட ஆட்சியர் ஆருஷி மாலிக் நியமித்துள்ளார்.