

சத்தீஸ்கர் மாவட்டம் கோரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜகதீஷ் பிரசாத். இவருக்கு ஜிஎஸ்டி அமலான ஜூலை 1-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதுபற்றி பிரசாத் கூறியதாவது:
ஜூலை 1-ம் தேதி இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்தது. வரிப்புரட்சிக்கு வித்திட்ட ஜூலை 1-ம் தேதி எனது மகள் பிறந்தார். அந்த நாளை என்னால் மறக்கமுடியாது. அதனால் நானும் என் மனைவியும் சேர்ந்து எனது மகளுக்கு ஜிஎஸ்டி என பெயர்சூட்டியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜூலை 1-ம் தேதி காலையில் ஜகதீஷின் மனை விக்கு பிரசவ வலி ஏற்பட்டு அரசு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். ஜூலை 1-ம் தேதி பிறந்து ஜிஎஸ்டி என பெயர்சூட்டப்பட்ட குழந் தையை கிராம மக்கள் அனைவரும் ஆர்வமுடன் நேரில் சென்று பார்த்து மகிழ்கின்றனர்.
இதை கேள்விப்பட்ட ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, குழந்தை நலமுடன் வாழ ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.