காஷ்மீர் விவகாரத்தில் சீனாவை அனுமதிக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்

காஷ்மீர் விவகாரத்தில் சீனாவை அனுமதிக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்
Updated on
1 min read

காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் தலையீட்டை அனுமதிக்க முடியாது என்றும் மத்திய அரசு சூசகமாக தெரிவித்துள்ளது.

காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவதும் தீவிரவாதிகளை ஏவி விடுவதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் இரு நாடு களுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரு நாடுகளுக்கிடையே சமரசம் ஏற்படுத்த தயாராக இருப்பதாக சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியி ருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை தாண்டிய தீவிரவாதம்தான் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதனால் அந்த மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

குறிப்பாக, பாகிஸ்தான் மண்ணி லிருந்து ஏவப்படும் எல்லை தாண்டிய தீவிரவாதம், இந்தியா மட்டுமல்லாது பிறபக்கத்து நாடுகளின் அமைதிக்கும் ஸ்திரத் தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

காஷ்மீர் உட்பட அனைத்து விவகாரம் குறித்தும் பாகிஸ் தானுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப் பாடு. ஆனால் அதற்கு முன்பாக தீவிரவாத தாக்குதலை நிறுத்த வேண்டும். இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இதில் பிற நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in