பல்கலை., கல்லூரி ஆசிரியர்களின் ஊதியம் உயர வாய்ப்பு: 20 சதவீதம் உயர்த்த மத்திய அரசுக்கு யூஜிசி பரிந்துரை

பல்கலை., கல்லூரி ஆசிரியர்களின் ஊதியம் உயர வாய்ப்பு: 20 சதவீதம் உயர்த்த மத்திய அரசுக்கு யூஜிசி பரிந்துரை
Updated on
2 min read

பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் ஊதியம் உயரும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இவர்களின் ஊதியத்தை 20 சதவீதம் உயர்த்தும்படி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத் துக்கு யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) நேற்று பரிந்துரை செய்துள்ளது.

ஏழாவது ஊதியக் குழுவுக்காக, யுஜிசியின் 5 உறுப்பினர்கள் கொண்ட குழு ஆலோசனை செய்து, தனது பரிந்துரைகளை முடிவு செய்துள்ளது. இதில் ஆசிரியர்ளுக்கு ஆய்வு அடிப் படையிலான திறனுக்கு ஏற்றவாறு ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. மத்திய பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 65 என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

கடைசியாக 10 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர்களின் ஊதியம் சுமார் 30 சதவீதம் உயர்த்தப் பட்டது. அதன்பிறகு இதுவரை உயர்த்தப்படவில்லை. இவர்களின் அகவிலைப்படி மட்டுமே ஒருசில சதவீதங்கள் உயர்த்தப்பட்டு வரு கிறது. எனவே, இந்தமுறை அடிப் படை ஊதியத்தை 20 சதவீதம் உயர்த்த பரிந்துரைக்கப்பட் டுள்ளது. இதன்படி உதவிப் பேராசிரியர்களின் சம்பளம் ரூ.50,000-ல் இருந்து சுமார் 59,000 ஆக உயர வாய்ப்புள்ளது.

இதுபோல் இணை பேரா சிரியர்களின் சம்பளம் ரூ.1,07,000-ல் இருந்து சுமார் 1,26,000 ஆகவும் பேராசிரியர்களின் சம்பளம் ரூ.1,23,000-ல் இருந்து சுமார் 1,44,000 ஆகவும் உயர வாய்ப் புள்ளது.

இத்தொகை அகவிலைப்படி, வீட்டு வாடகை உட்பட அனைத்தும் சேர்ந்தது ஆகும். இதுபோல், புதிதாக பணியில் சேரும் உதவிப் பேராசிரியர்களின் அடிப்படை ஊதியமும் சுமார் ரூ.43,000 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐவர் குழுவின் இந்தப் பரிந்துரையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்றுக் கொண்டால் தான் அதற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்.

குடிமைப்பணி அதிகாரிகளின் ஊதியம், ஏழாவது ஊதியக்குழு வால் கடந்த ஆண்டு பரிந் துரைக்கப்பட்டது. இதை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொண்டு அமல்படுத்தியுள்ளது. இதனால் அதே பரிந்துரையின் அடிப் படையில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கணக்கிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2006-ல் செய்யப்பட்ட ஊதிய உயர்வில் குடிமைப்பணி அதிகாரிகளின் தொடக்க ஊதியத்தை விட பல்கலை., கல்லூரி ஆசிரியர்களின் ஊதியம் அதிகமாக நிர்ணயிக்கப் பட்டிருந்தது. இந்தமுறை ஊதிய உயர்வுக்கு பின்பும் அதேநிலை தொடரும் எனத் தெரியவந் துள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “ஐவர் குழுவின் பரிந்துரையை ஏற்பதால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இதைச் சமாளிக்க நாட்டில் உள்ள 40 மத்திய பல்கலைக்கழகங்கள் மூலம் அரசுக்கு கூடுதல் பண வரவுக்கான வழிகள் குறித்து கேட்க உள்ளோம். இதில் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உயர்த்துவது குறித்தும் கருத்து கேட்கப்பட உள்ளது. இதில் கிடைக்கும் பதிலுக்குப் பின் துல்லியமான ஊதிய உயர்வு தெரியவரும்” என்று தெரிவித்தனர்.

கடந்த 2016 ஜனவரி முதல் அமலாக உள்ள ஊதிய உயர்வால் சுமார் 30,000 ஆசிரியர்கள் பலனடைவார்கள், மாநில அரசுகளின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு இதை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. என்றாலும் மத்திய அரசின் ஊதிய உயர்வை மாநிலங்களும் ஏற்று அமல்படுத்துவது வழக்க மாக உள்ளது. மத்திய அரசின் ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறு வனங்களின் ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டு ஆலோ சனை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in