மேற்கு ஆசியப் போரில் 14 மாலுமிகள் உட்பட 22 இந்தியர்கள் உயிரிழப்பு

Updated on: 
1 min read

புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் நடை​பெற்று வரும் போரில் கடந்த எட்டு மாதங்​களில் 14 மாலுமிகள் உள்​பட 22 இந்தியர்கள் உயி​ரிழந்​துள்​ள​தாக மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் தெரிவித்துள்​ளது.

இது​குறித்து வெளி​யுறவு அமைச்​சக செய்​தித் தொடர்​பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறிய​தாவது: மேற்கு ஆசி​யாவில் நடை​பெறும் மோதல் குறித்து நாங்​கள் மிகவும் கவலை கொண்​டுள்​ளோம். இது​வரை இந்த மோதலில் 14 மாலுமிகள் உள்​பட 22 இந்​தி​யர்​களை இழந்​துள்​ளோம். அங்​குள்ள இந்​தி​யர்​களின் பாது​காப்​பையும் நலனையும் உறுதிசெய்ய, அவர்களு​டன் அரசு தொடர்ந்து நெருங்​கிய தொடர்​பில் இருந்து வருகிறது.

இஸ்ரேலுடன் இந்​தியா நல்ல, வலு​வான உறவைக் கொண்​டுள்​ளது. வரும் நாட்​களில் இந்த உறவை மேலும் மேம்​படுத்​தவும் வலுப்படுத்​தவும் நாங்​கள் பாடு​படுவோம். அங்கு தேர்​தல் முடிவுகளைப் பொறுத்​தவரை, என்ன முடிவு​கள் வெளிவருகின்றன என்​ப​தைப் பொறுத்​திருந்தே பார்க்க வேண்டும். இவ்​வாறு அவர் கூறினார்.

கடந்த பிப்​ரவரி 28 அன்று அமெரிக்​கா​வும் இஸ்ரேலும் ஈரான் மீது வான்​வழி தாக்​குதல் நடத்​தின. இதில் ஈரான் உச்ச தலை​வரும் பிற உயர் அதி​காரி​களும் உயி​ரிழந்​தனர். இதற்​குப் பதிலடி​யாக, வளைகுடா பகுதி​யில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்​களை ஈரான் குறிவைத்​துத் தாக்​கியதுடன், உல​களாவிய கப்​பல் போக்குவரத்​துக்கு முக்​கிய​மான ஹார்​முஸ் நீரிணை வழி​யி​லான போக்​கு​வரத்​தையும் கட்​டுப்​படுத்​தி​யது.

இஸ்ரேலின் அரசி​யல் தலை​மைக்​கும் அதன் வெளி​நாட்டு உறவுகளுக்​கும் தேர்​தல் முடிவு​கள் ஏற்​படுத்​தக்​கூடிய தாக்​கங்​கள் உலகளவில் உன்​னிப்​பாகக் கவனிக்​கப்​படு​கின்​றன. பாது​காப்பு, வர்த்தகம், வேளாண்மை, தொழில்​நுட்​பம் உள்​ளிட்ட பல துறைகளில் இந்​தி​யா​வும் இஸ்ரேலும் தொடர்ந்து கூட்​டுறவு மேற்​கொண்டு வருவது குறிப்​பிடத்​தக்​கது

மேற்கு ஆசியப் போரில் 14 மாலுமிகள் உட்பட 22 இந்தியர்கள் உயிரிழப்பு
ஃபிளை துபாய் விமான தாக்குதலை முறியடித்த இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ அரசின் உயரிய விருது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in