

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில் ஒரு அரசு ஊழியர் உட்பட 4 பேரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து கிரிதி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கிரந்தி குமார் கூறுகையில், "நொகன்யா கிராமம் அருகே சனிக்கிழமை சென்று கொண்டிருந்த ஒரு காரை வழிமறித்த மர்ம நபர்கள், அதில் இருந்த வட்டார வளர்ச்சி அதிகாரி (பிடிஓ), 2 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட 5 பேரைக் கடத்திச் சென்றனர்.
பின்னர் கார் ஓட்டுநரை மட்டும் விட்டுவிட்டு மற்ற 4 பேரை அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.