ஜம்மு காஷ்மீரில் லேசான நில அதிர்வு

ஜம்மு காஷ்மீரில் லேசான நில அதிர்வு
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரில் வெள்ளிகிழமை அன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது 3.2 ரிக்டராக பதிவானது.

இந்த அதிர்வில் சேதம் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை.

இதுகுறித்துப் பேசிய வானிலைத் துறை இயக்குநர் சோனம் லோட்டஸ், ''அதிகாலை 3.49 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இந்த அதிர்வு 74.7 டிகிரி கிழக்கிலும், 32.7 டிகிரி வடக்கிலும் ஏற்பட்டது.

நில அதிர்வின் மையப் புள்ளி ஜம்மு, காஷ்மீராக இருந்தது'' என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in