சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.3 அதிகரிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.3 அதிகரிப்பு
Updated on
1 min read

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் உயர்த்தப்பட்டதால் மானிய விலை சிலிண்டர் கட்டணம் ரூ.3 அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் கமிஷனை ரூ.3 அதிகரித்து 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டருக்கு ரூ.43.71-ஆக வழங்க கடந்த வாரம் அரசு சம்மதித்தது.

இதனையடுத்து, மானிய விலை சிலிண்டர்களுக்கான கட்டணமும் ரூ.3 அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாடிக்கையாளருக்கு ஆண்டுக்கு 12 மானிய விலை சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. 12-ஐ தாண்டி வாங்கப்படும் சிலிண்டர் ஒன்றின் விலை இனி ரூ.883.50- ஆக இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in