

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பதிவு செய்யவதற்கு மத்திய அரசு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை என்று மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பதிவு செய்ய சில அமைப்புகள் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளதை அடுத்து மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
உத்யோக் ஆதார் மெமரண்டம் எனப்படும் இந்த விண்ணப்பத்தை >http://udyogaadhaar.gov.in/ என்ற அமைச்சகம் ஏற்படுத்தியுள்ள இணையதளத்தின் மூலம் மட்டுமே நிரப்ப முடியும்.
இந்த விண்ணப்ப முறை மிகவும் எளிதானது. மூன்றாம் நபர் உதவியின்றி நிரப்ப முடியும். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட தொழிற்சாலைகள் மையத்தின் பொது மேலாளர்கள் உதவியைப் பெற்று விண்ணப்பத்தை நிரப்பலாம் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.