ஆந்திரா, தெலங்கானாவில் வெயிலுக்கு 20 பேர் பலி

ஆந்திரா, தெலங்கானாவில் வெயிலுக்கு 20 பேர் பலி
Updated on
1 min read

ஆந்திரா, தெலங்கானா மாநிலங் களில் வெயில் கொடுமை தாங்க முடியாமல் கடந்த 2 நாட்களில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திரா மற்றும் தெலங் கானா மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக 40 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. தெலங்கானாவில் ஹைதராபாத், வாரங்கல், கம்மம், ரங்காரெட்டி, மேதக், நல்கொண்டா ஆகிய மாவட்டங்களிலும், ஆந்திராவில் கடப்பா, சித்தூர், குண்டூர், அனந்தபூர், விஜயவாடா ஆகிய மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் புதன்கிழமை மட்டும் தெலங்கானாவில் 18 பேர் வெயில் கொடுமை தாளாமல் உயிரிழந் துள்ளனர். ஆந்திராவில் நேற்று 2 பேர் இறந்துள்ளனர்.

கத்திரி வெயில் தொடங்காத நிலையில் கடும் வெயிலுக்கு 2 நாளில் 20 பேர் பலியானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர். தற்போது வெயில் கொடுமையால் இறந் தவர்கள் அனைவரும் முதியவர் கள் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in