

கோப்புப்படம்
ராய்பூர்: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாட்டில் இருந்து மாவோயிஸ்ட்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 35 மாவோயிஸ்ட்கள் சரணடைந்தனர்.
இதுதொடர்பாக சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் அளித்த பேட்டியில், ‘‘சத்தீஸ்கரில் இன்று வரை 2,000-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் சரணடைந்துள்ளனர்.
அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 நிதியுதவி அளிக்கிறோம். அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, விவசாய நிலம், வீடு கட்ட இடம் வழங்கும் திட்டங்கள் உள்ளன. சரணடையும் மாவோயிஸ்ட்களின் எதிர்கால நலனில் அக்கறையாக இருக்கிறோம்’’ என்றார்.