‘திரிணமூல் எம்பிக்கள் 20 பேர் பாஜக கூட்டணியில் இணைய விருப்பம்’

சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியதாக ககோலி கோஷ் தஸ்திதார் தகவல்
ககோலி கோஷ் தஸ்திதார் | கோப்புப் படம்

ககோலி கோஷ் தஸ்திதார் | கோப்புப் படம்

Updated on
1 min read

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் 20 பேர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனை அக்கட்சியின் எம்.பி ககோலி கோஷ் தஸ்திதார் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்​கத்​தில் 15 ஆண்​டுகளாக ஆட்​சி​யில் இருந்த மம்தா பானர்​ஜியை வீழ்த்தி பாஜக முதல் ​முறை​யாக ஆட்சியை பிடித்​துள்​ளது. பாஜக சார்பில் முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றுள்ளார்.

மம்​தா​வின் தோல்​வியை தொடர்ந்து அவரது திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சிக்​குள் மோதல் தீவிரம் அடைந்​துள்​ளது. கட்​சி​யின் அதிருப்தி எம்​எல்​ஏக்​கள் சுமார் 60 பேர் ரிதப்​ரதா பானர்ஜி தலை​மை​யில் அணி திரண்​டனர். இதையடுத்து சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வர் பதவியை ரிதப்​ரதா பானர்ஜி கைப்​பற்​றியது மம்​தாவுக்கு அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யது.

மேலும் திரிண​மூல் கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் பலர் தங்​கள் கட்​சிப் பதவியை ராஜி​னாமா செய்​தனர். சிலர் கட்சியி​லிருந்து வெளி​யேறினர். கவுன்சிலர்கள், கொல்கத்தா மேயரும் ராஜினாமா செய்தனர்.

திரிண​மூல் கட்​சிக்​குள் ஏற்​பட்​டுள்ள அரசி​யல் குழப்​பம் தற்​போது மேற்கு வங்​கத்தை தாண்டி நாடாளுமன்றத்துக்குள்ளும் பரவியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் 20 பேர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இது குறித்து அக்கட்சியின் எம்பி ககோலி கோஷ் தஸ்திதார் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “நான் உட்பட சுமார் 20 டிஎம்சி எம்பிக்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கும் முடிவை நாங்கள் எடுத்திருப்பதை தெரிவித்துள்ளோம். மேற்கு வங்கத்தில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். எங்கள் எதிர்கால அரசியல் பாதை என்டிஏ உடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறாம்” என்று தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பசிர்ஹாட் எம்பி ஹாஜி நூருல் இஸ்லாம் மறைவை அடுத்து அந்த தொகுதி தற்போது காலியாக உள்ளதால், தற்போது கட்சிக்கு 28 மக்களவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மூன்றில் இரண்டு பங்குக்கும் குறையாத எண்ணிக்கையிலான எம்பிக்கள் தனி அணியாக செயல்பட முடியும். அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாய முடியாது. எனவே, இவர்கள் தனி அணியாக செயல்பட முடிவெடுத்துள்ளனர்.

<div class="paragraphs"><p>ககோலி கோஷ் தஸ்திதார் | கோப்புப் படம்</p></div>
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தம்: ஈரான் ராணுவம் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in