மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Updated on
1 min read

புதுடெல்லி: மத்​திய அரசு ஊழியர்​களுக்கு அகவிலைப்​படியை (DA) 2% உயர்த்த மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது.

மத்​திய அரசு தனது ஊழியர்​கள் மற்​றும் ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களுக்கு ஆண்​டுக்கு இரு முறை அகவிலைப்​படி (DA) மற்​றும் அகவிலை நிவாரணத்தை மாற்றி அமைக்​கிறது. வழக்​க​மாக ஜனவரி மற்​றும் ஜூலை மாதங்​களில் இந்த மாற்​றம் மேற்​கொள்​ளப்​படு​கிறது.

மத்​திய அரசு ஊழியர்​களுக்​கான அகவிலைப்​படி கடைசி​யாக கடந்த அக்​டோபர் மாதம் மாற்றி அமைக்​கப்​பட்​டது. அப்​போது 55-லிருந்து 58% ஆக உயர்த்​தப்​பட்​டது. இந்த உயர்வு ஜூலை 1, 2025 முதல் நடை​முறைக்கு வந்த நிலை​யில் நிலு​வைத் தொகை​யுடன் அமல்​படுத்​தப்​பட்​டது. இதனால் பணி​யில் இருக்​கும் ஊழியர்​கள் மற்​றும் ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் பலன் அடைந்​தனர்.

இந்​நிலை​யில் பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் மத்​திய அமைச்​சர​வைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் மத்​திய அரசு ஊழியர்​களுக்​கான அகவிலைப்​படி மற்​றும் ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களுக்​கான அகவிலை நிவாரணத்தை 2% உயர்த்த ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. 8-வது ஊதி​யக் குழு​வின் கீழ் ஊதி​யக் கட்​டமைப்​பில் முக்​கிய மாற்​றங்​களைச் செய்ய ஊழியர் சங்​கங்​களிடம் இருந்து கோரிக்​கை வந்​த நிலை​யில் இந்த உயர்வு அமலுக்கு வரு​கிறது.

பிட்​மென்ட் காரணியை 3.83 சதவீத​மாக​வும் குறைந்​த​பட்ச அடிப்​படை ஊதி​யத்தை ரூ.18 ஆயிரத்​தில் இருந்து 69 ஆயிர​மாக​வும் உயர்த்த ஊழியர் சங்​கங்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளன. ஊதி​யக் கணக்​கீடு​களுக்​கான ‘குடும்​பம்' என்​ப​தன் வரை யறையை பெற்​றோர்​களை​யும் உள்​ளடக்​கும் வகை​யில் விரிவுபடுத்​த​வும் முன்​மொழிந்​துள்ளன.

மேலும் இந்​தி​யா​வுக்கு வரும் மற்​றும் இந்​தி​யா​வில் இருந்து புறப்​படும் இந்​தி​யக் கொடி ஏந்​திய கப்​பல்​களுக்கு நிலை​யான மற்​றும் மலி​வான காப்​பீட்டு பாது​காப்பை வழங்​கு​வதற்​காக ரூ.13,000 கோடி நிதி​யுடன் கூடிய இறை​யாண்மை கடல்​சார் நிதிக்​கும் அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது.

மேலும் பிரதமர் கிராம சாலைகள் (பிஎம்​ஜிஎஸ்​ஒய்) திட்​டத்தை 2028 வரை நீட்​டிக்​க​வும் இதற்​காக கூடு​தலாக ரூ.3,000 கோடி ஒதுக்​கீடு செய்​ய​வும் அமைச்​சர​வை ஒப்​புதல்​ வழங்கியது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சத்தீஸ்கரில் பாய்லர் வெடித்ததில் உயிரிழப்பு 23 ஆக உயர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in