சத்தீஸ்கரில் பாய்லர் வெடித்ததில் உயிரிழப்பு 23 ஆக உயர்வு

சத்தீஸ்கரில் பாய்லர் வெடித்ததில் உயிரிழப்பு 23 ஆக உயர்வு
Updated on
1 min read

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநிலம் சக்தி மாவட்​டம் சிங்​தா​ராய் பகு​தி​யில் வேதாந்தா குழு​மத்​துக்கு சொந்​த​மான அனல்​ மின் நிலை​யம் உள்​ளது. இங்கு கடந்த 14-ம் தேதி ஒரு பெரிய பாய்​லர் திடீரென வெடித்து சிதறியது. இதில் 10 தொழிலா​ளர்​கள் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். மேலும் பலர் படு​கா​யம் அடைந்​தனர்.

இந்​நிலை​யில் சிகிச்சை பெறு​பவர்​களில் ராய்ப்​பூர், கல்டா மருத்​து​வ​மனை​யில் ஒரு​வரும் ராய்​கர் மருத்​து​வக் கல்​லூரி​யில் மற்​றொரு​வரும் நேற்று உயி​ரிழந்​தனர். இதனால் இந்த விபத்​தில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 23 ஆக உயர்ந்​துள்​ளது.

பாய்​லர் வெடிப்​புக்​கான காரணம் குறித்து தலைமை கொதி​கலன் ஆய்​வாளர் அளித்​துள்ள முதற்​கட்ட அறிக்​கை​யில், ‘‘பாய்​லர் உலைக்​குள் அதிக எரிபொருள் தேங்​கிய​தால் அழுத்​தம் வேக​மாக அதி​கரித்​தது. இந்த அழுத்​தம் ஒரு கீழ் குழாயைப் பெயர்த்​தெடுத்​தது. இதனால் கட்​டமைப்பு தோல்வி ஏற்​பட்டு வெடிப்பு நிகழ்ந்​தது’’ என்று கூறப்​பட்​டுள்​ளது.

சக்​தி​யில் உள்ள தடய அறி​வியல் ஆய்​வக​மும் இந்த காரணத்தை உறு​திப்​படுத்​தி​யுள்​ளது. இந்த அறிக்கை மாவட்ட நிர்​வாகம் மற்​றும் காவல் துறை​யிடம் அளிக்​கப்​பட்​டது. இது தொடர்​பாக ஒரு மத்​திய குழு விரி​வான விசா​ரணை நடத்த உள்​ளது. இந்​தச் சம்​பவம் தொடர்​பாகச் சக்தி மாவட்ட எஸ்​.பி.உத்​தர​வின் பேரில் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர்.

சத்தீஸ்கரில் பாய்லர் வெடித்ததில் உயிரிழப்பு 23 ஆக உயர்வு
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: ராகுல் வீடு நோக்கி பாஜக பெண் தலைவர்கள் பேரணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in