சம்மனை தபாலில் அனுப்ப மகாராஷ்டிர அரசுக்கு அறிவுறுத்தல்

சம்மனை தபாலில் அனுப்ப மகாராஷ்டிர அரசுக்கு அறிவுறுத்தல்
Updated on
1 min read

நிலுவை வழக்குகளின் எண்ணிக் கையைக் குறைக்க குற்றவாளிகள், சாட்சிகள் ஆகியோருக்கு சம்மன் கள், வாரன்ட்களை பதிவுத் தபாலில் அனுப்ப மகாராஷ்டிர அரசை மும்பை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

விவேக் விட்டல் மகாமுனி என்பவர் இதுதொடர்பாக பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அது தொடர்பான மனுவில், “நீதிமன்றத் தால் அனுப்பப்படும் வாரன்ட், சம்மன்கள் குறிப்பாக 138-வது பிரிவு செலாவணி முறிச் சட்டம் 1881ன் கீழ் அனுப்பப்படுபவை சரியான நேரத்தில் விநியோகிக்கப் படுவதில்லை” எனக் குறிப்பிட் டிருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதி பதிகள் வி.எம். கனடே, ஸ்வப்னா ஜோஷி ஆகியோரடங்கிய அமர்வு, “மகாராஷ்டிராவுக்குள் நிலுவையி லுள்ள அனைத்து சம்மன்கள், வாரன்ட்களை மிக விரைவாக அனுப்புவதைக் காவல் துறை தலைவர் உறுதி செய்ய வேண்டும். வாய்ப்பு இருக்குமானால், குற்றவியல் நடைமுறைச்சட்டம் 1973-ல் திருத்தம் மேற்கொள்ள மாநில அரசு முன்வர வேண்டும். செலாவணி முறிச்சட்டத்தில் (காசோலை மோசடி) 138-வது பிரிவில் திருத்தம் செய்து, சம்மன்களை பதிவுத் தபாலில் அனுப்ப வகை செய்யும்படி மாநில அரசுக்கு பரிந்துரை செய்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

நீதிபதிகள் மேலும் கூறும் போது,

“நிலுவை வழக்குகளில் 80 சதவீதம் சம்மன் அனுப்பும் நிலை யில் உள்ளன. இதுபோன்ற வழக்கு களில் வங்கிகள் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு நோட் டீஸ் அனுப்பும்படி அறிவுறுத்தப் பட்டன. இதனால், மும்பையில் நிலுவை வழக்குகளின் எண் ணிக்கை 3.45 லட்சத்திலிருந்து 69 ஆயிரமாக குறைந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் வங்கியி லிருந்து நோட்டீஸ் பெற்றதால், வழக்குகளைத் தீர்த்துக் கொள்ள முன்வந்ததால்தான், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது” என தெரி வித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in