

உயர் கல்வியில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017 - 2018-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
மத்திய அமைச்சர் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் 'உயர் கல்வி' தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:
* உயர் கல்வியில் புதிய கண்டுபிடிப்புக்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.
* யுஜிசியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
* அங்கீகாரம், தரவரிசை மற்றும் தன்னாட்சி அந்தஸ்தின் அடிப்படையில் கல்லூரிகள் அடையாளம் காணப்படும்.
* இளைஞர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் 'ஸ்கில் இந்தியா' திட்டம் 2015-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நாடு முழுக்க 100 சர்வதேச இந்திய திறன் வளர் மையங்கள் நிறுவப்பட உள்ளன.
* ஜவுளித்துறையில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் ஏற்கெனவே ஒரு சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல் தோல் மற்றும் காலணி துறைகளிலும் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.