

விஜய் மல்லையா இன்று வெஸ்ட்மின்ஸ்டர் மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆஜரானார். தலைமை மேஜிஸ்ட்ரேட் எம்மா லூசி அர்புத்நாட் மல்லையாவுக்கு டிசம்பர் 4-ம் தேதி வரை ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் மே மாதத்தில் விசாரணைக்கு வந்த வழக்கு, ஜூன் 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 6-ம் தேதிக்கு நடைபெற உள்ளது. இந்த வழக்கின் முடிவில் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டால், அடுத்த இரு மாதங்களுக்குள் இங்கிலாந்து உள்துறைச் செயலாளர் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிடுவார்.
அடுத்த முறை வழக்கு விசாரணையின் போது போது நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்களை அனுமதிக்கக்கூடாது என்று நீதிபதிகளிடம் மல்லையா கோரிக்கை வைத்துள்ளார்.
நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மல்லையா, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், கடன்களை வேறு வகைகளில் திருப்பிவிடவில்லை, அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளேன் என்று குறிப்பிட்டார். மேலும் தான் நிரபராதி என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளது என்றும் மல்லையா கூறினார்.