திருவனந்தபுரத்தில் பாஜக அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு

திருவனந்தபுரத்தில் பாஜக அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு
Updated on
1 min read

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக அலுவலகம் மீது நேற்று முன்தினம் இரவு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது.

பாஜக மாநிலத் தலைவர் கும்மணம் ராஜசேகரன் அலுவல கத்தை விட்டு புறப்பட்டுச் சென்ற 45 நிமிடங்களுக்குப் பிறகு இந்த குண்டு வீசப்பட்டது. இதில் முக்கிய நுழைவாயில் கதவின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன.

இந்தச் சம்பவத்தின்போது, கட்டிடத்தின் மேல் தளத்தில் 4 தொண்டர்கள் மட்டுமே இருந்தனர். இவர்கள் காயமின்றித் தப்பினர்.

வடக்கு கண்ணூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாஜக தொண்டர்கள் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டுவரும் நிலையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து கும்மணம் ராஜசேகரன் கூறும்போது, “கேரளத் தில் ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் மார்க்சிஸ்ட் கட்சியினர் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். போலீ ஸாரும் வேடிக்கை பார்க்கின்றனர். வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் அக்கட்சியே உள்ளது” என்றார்.

இந்தச் சம்பவத்தை கண்டித்து பாஜக தொண்டர்கள் நேற்று தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்றனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் திருவனந்தபுரம் மாவட்டச் செயலர் அனாவூர் நாகப்பன் விடுத் துள்ள அறிக்கையில், “குண்டுவீச்சு சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சிக் கும் எவ்வித தொடர்பும் இல்லை. அரசியல் ஆதாயம் கருதி எங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in