டெல்லி எம்எல்ஏக்கள் 4 பேர் மக்களவைத் தேர்தலில் போட்டி

டெல்லி எம்எல்ஏக்கள் 4 பேர் மக்களவைத் தேர்தலில் போட்டி
Updated on
1 min read

மக்களைவை தேர்தலில் இந்தமுறை டெல்லியில் 4 எம்.எல்.ஏ.க்கள் போட்டியிடுகிறார்கள். இதனால் டெல்லியில் மீண்டும் சட்டசபை தேர்தல் வரும் சூழல் நிலவுகிறது.

பாஜக முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவரும் கிருஷ்ணா நகர் எம்.எல்.ஏ.வு மான டாக்டர்.ஹர்ஷவர்தன் சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதியிலும் துக்ளக்காபாத் எம்.எல்.ஏ. ரமேஷ் விதூரி தெற்கு டெல்லி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

ஆம் ஆத்மியின் மங்கோல்புரி எம்.எல்.ஏ. ராக்கி பிர்லா வட மேற்கு டெல்லி (ரிசர்வ்) தொகுதியிலும், புது டெல்லி எம்.எல்.ஏ.வும் முன்னாள் முதல்வருமான அர்விந்த கேஜ்ரிவால் வாரணாசியிலும் போட்டியிடுகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட லஷ்மி நகர் எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி, திரிணமூல் காங்கிரளஸில் இணைந்துள்ளார். இவர் டெல்லி தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது. இதனால் டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைய வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் நடை பெற்ற டெல்லி சட்டசபை தேர்த லில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 70 இடங்களில் 28-ஐப் பெற்ற ஆம் ஆத்மி கட்சி, காங்கிரசின் எட்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆம் ஆத்மி அரசு தங்கள் தேர்தல் வாக்குறுதிப்படி, ஜன் லோக்பால் மசோதாவை அறிமுகப் படுத்த முயன்றது. ஆனால், காங்கிரஸும் பாஜகவும் இணைந்து அந்த முயற்சியை தோற்கடித்தன.

இதனால், 49 நாள் ஆட்சிக்கு பின் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அர்விந்த் கேஜ்ரிவால். அப்போது, சட்டசபையை கலைத்து மறு தேர்தலுக்கு உத்தரவிடுமாறும் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கிடம் பரிந்துரைத்தார். இதை ஏற்காத மத்திய அரசு, டெல்லியில் பிப்ரவரி 16 முதல் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைத்து. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி தொடுத்த வழக்கு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில், டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. இதுகுறித்த தங்கள் நிலைப் பாட்டை தெரிவிக்குமாறு பாஜக மற்றும் காங்கிரஸூக்கு உச்ச நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந் தது. இந்த வழக்கு மார்ச் 31-ல் மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in