

கடந்த 1954-ம் ஆண்டு முதல் நடப் பாண்டு வரை பத்ம விருதுகள் பெற்ற அனைவர் குறித்த முழு மையான விவரங்களை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
வெளிப்படைத் தன்மை, பத்ம விருதுகள் வழங்கும் நடவடிக்கைகளில் மக்களைப் பங்கேற்கச் செய்தல் ஆகியவற்றின் முயற்சியாக மத்திய அரசு இதனை மேற்கொண்டுள்ளது. இதற்காக www.padmaawards.gov.in:8888 என்ற இணையதளத்தில் முழுவிவரங்கள், பகுப்பாய்வுகள் அடங்கிய தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அனைத்து பத்ம விருதுகள், யாருக்கு என்ன விருது வழங்கப் பட்டது, ஆண்டு, எந்த மாநிலம், எந்த துறை போன்ற விவரங்கள் அதில் அளிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,400 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரின் விவரங்களும் எளிதில் பார்க்கும்படி இணையதளத்தில் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
பத்ம விருது பரிந்துரைகளை பொதுமக்கள் மேற்கொள்ளும் வசதியை மத்திய அரசு ஏற் கெனவே அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்கள் தங்கள் பரிந்துரை களையும் இந்த இணையதள முகவரி மூலமே மேற்கொள்ளலாம்.
நடப்பாண்டுக்கு பரிந்துரை செய்ய நாளை இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.