பீகாரில் மாவோயிஸ்ட் கண்ணிவெடி தாக்குதல் : 6 போலீசார் பலி

பீகாரில் மாவோயிஸ்ட் கண்ணிவெடி தாக்குதல் : 6 போலீசார் பலி
Updated on
1 min read

பீகாரின் அவுரங்கபாத் மாவட்டத்தில், ரோந்துப் பணி மேற்கொண்டிருந்த 6 போலீசார், மாவோயிஸ்ட்களின் கண்ணி வெடித் தாக்குதலில் பலியாகியுள்ளதாகவும், இறந்தவர்களில் தண்ட்வா காவல் நிலைய அதிகாரி அஜய் குமாரும் ஒருவர் என்றும் காவல்துறை ஆய்வாளர் சுஷில் கோப்டே தெரிவித்துள்ளார்.

நபிநகர் பகுதியிலிருந்து, தண்ட்வா காவல் நிலையத்திற்கு 6 போலீசாரும் திரும்புகையில், உத்ரி கோல் நகர் என்ற இடத்தின் அருகே குண்டு வெடித்தது. இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகலாம் என கோப்டே தெரிவித்தார்.

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியான அவுரங்கபாத், பாட்னாவிலிருந்து 200கிமீ தொலைவில், ஜார்கண்ட் மாநிலத்தின், பலமு மாவட்ட எல்லையை ஒட்டியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in