

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து, கடந்த 4 ஆண்டுகளில், தங்கக் கட்டிகள் மற்றும் ஆபரணத் தங்கமாக மொத்தம் 80 கிலோ தங்கம் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு, ரூ.25 கோடியாகும். தங்கத்துக்குப் பதிலாக, பெட்ட கத்துக்குள் மஞ்சள் நிற உலோ கத்தில் வார்க்கப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப் படுகிறது.
கடந்தாண்டு ஜூன் மாதத்தி லேயே, பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 11 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக சுங்கத் துறை அதிகாரிகள் டெல்லி காவல் துறையில் புகார் அளித்த னர். அதற்கும் முன்பாக, 2014-ம் ஆண்டில் ஜனவரி, ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களில் இதுபோன்ற வழக்குகள் பதியப்பட்டன.
உரிய நடவடிக்கை எடுக்கப் படாததோடு, பெட்டகத்தில் இருந்து தங்கம் மாயமாவது தொடர்ந்து நடப்பதால், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் ஒப்புதலுடன் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய, நிதி அமைச்சகம் தீர்மானித்தது.
இதைத்தொடர்ந்து, 2012-ம் ஆண்டு முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் சுங்கத் துறை பெட்டகத்தில் தங்கத் துக்குப் பதிலாக உலோகங்கள் வைக்கப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.