இன்று முதல் ஜூன் 3 வரை ஜெர்மனி உட்பட 4 நாடுகளுக்கு மோடி பயணம்

இன்று முதல் ஜூன் 3 வரை ஜெர்மனி உட்பட 4 நாடுகளுக்கு மோடி பயணம்
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் பயணமாக ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளுக்கு இன்று அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.

முதல் நாடாக ஜெர்மனி செல்லும் மோடி, அந்நாட்டு பிரதமர் ஏஞ்செலா மெர்க்கல், அதிபர் பிராங்க் வால்டர் ஸ்டெயின்மிர் ஆகியோரைச் சந்தித்து, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றி பேசுகிறார்.

அதன்பின்னர், இரு தலைவர் களும் ஜெர்மனி மற்றும் இந்தியத் தொழில் அதிபர்களுடன் வர்த்தகம், முதலீடுகளை வலுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். மே 30-ம் தேதி ஸ்பெயின் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டின் 6வது அரசர் பிலிப் மற்றும் அதிபர் மெரியானோ ராஜோய் ஆகியோரைச் சந்தித்து, உலகளவில் தீவிரவாதத்தைக் களைவது தொடர்பாகவும், இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இதன்பின்னர், ரஷ்யா செல்லும் மோடி அங்கு மே 31 முதல் ஜூன் 2-ம் தேதி வரை நடைபெறும் இந்திய - ரஷ்யா 18-வது ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

அங்கிருந்து ஜூன் 2-ம் தேதி பிரான்ஸ் செல்லும் பிரதமர், அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரானைச் சந்தித்து, பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார். பின்னர் ஜூன் 4-ம் தேதி மோடி நாடு திரும்புகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in