தொலைத்தொடர்பு நிறுவனங்களை கடிந்து கொண்ட சந்திரபாபு நாயுடு

தொலைத்தொடர்பு நிறுவனங்களை கடிந்து கொண்ட சந்திரபாபு நாயுடு
Updated on
1 min read

ஹூத் ஹூத் புயலால் விசாகப் பட்டினத்தின் உள்கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது. அங்கு இன்னமும் தொலைத்தொடர்பு சேவைகள் சீரடையவில்லை.

இதுதொடர்பாக தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோபமாகப் பேசிய சந்திரபாபு நாயுடு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வணிக நோக்கத்தோடு மட்டுமே செயல்படுகின்றன. மக்கள் நலனில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை, தகவல் தொடர்பு சீரடையாததால் அரசின் நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன, என்று கடிந்து கொண்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in