எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜவுரி மாவட்டம், பிம்பர் காலி செக்டார், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ராணுவ நிலைகள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது நேற்று காலை 11 மணிக்கு பாகிஸ்தான் படையினர் தாக்குதலைத் தொடங்கினர்.

துப்பாக்கியால் கண்மூடித்தன மாக சுட்டும் பீரங்கி குண்டுகளை வீசியும் இத்தாக்குதல் நடத்தப் பட்டது. இதற்கு இந்தியத் தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டது.

ரஜவுரி மற்றும் பூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், முந்தைய 24 மணி நேரத்தில் மூன்றாவது முறையாக இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

ரஜவுரி மாவட்டத்தின் பால கோட் செக்டார் மற்றும் பூஞ்ச் மாவட்டத்தின் திக்வார் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in