

கர்நாடக மாநில அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 35 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அரசு தரப்பில் வழக்கமாக வழங்கப் படும் 8 சதவீத ஊதிய உயர்வில் இருந்து கூடுதலாக 2 சதவீதம் வழங்குவதாக அறிவிக்கப் பட்டது. இதற்கு போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளன.
இதையடுத்து கர்நாடக போக்குவரத்துக் கழக ஊழியர் கள் தங்களின் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதனால் பெங்க ளூரு, மைசூரு, மங்களூரு, ஹூப்ளி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் உள்ள அரசு பேருந்துகள் இயங்கவில்லை. பெங்களூருவில் 7 ஆயிரம் பிஎம்டிசி பேருந்துகளும், மற்ற மாவட்டங்களில் 23 ஆயிரம் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளும் ஓடவில்லை. இதனால் வெளியூர் மற்றும் உள்ளூர் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இந்நிலையில் கர்நாடக அரசு தரப்பில் தற்காலிகமாக இயங்க 86 ஆயிரம் தனியார் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதனிடையே நேற்று மாலை யில் பெங்களூருவில் சில இடங் களிலும், கதக், பீஜாப்பூர் உள் ளிட்ட இடங்களில் இயக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் மீது போராட்டக்காரர் கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதே போல சென்னை, சேலம், கோவை, மதுரை, திருச்சி உள் ளிட்ட தமிழக நகரங்களில் இருந்து பெங்களூருக்கு வந்த 20-க்கும் மேற்பட்ட தமிழக அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இத னால் தமிழக அரசு பேருந்துகளும் ஓசூரிலே நிறுத்தப்பட்டன.
வேலை நிறுத்தத்தால் நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.