

மக்களவையில் நேற்று எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவில் எச்ஐவி நோயாளிகளுக்கு ‘இயலும் வரை’ மருத்துவச் சிகிச்சை அளிக்கப் படும் என்று கூறப்பட்டிருப்பதற்கு சிவசேனா உள்ளிட்ட சில கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மக்களவையில் நேற்று அளித்த வாய்மொழி வாக்குறுதியில், எச்ஐவி, எய்ட்ஸ் நோயாளிகள் அனைவருக்கும் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து மசோதா மக்களவையில் நிறைவேற்றப் பட்டது. இதன்மூலம் எச்ஐவி நோயாளிகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் சமஉரிமை அளிக்கப் படும். இந்த மசோதா கடந்த மார்ச் 22-ம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.