

தன்பாலின உறவை கிரிமினல் குற்றமாக வரையறுக்கும் அரசியல் சாசன சட்டப்பிரிவு 377-ஐ நீக்கக் கோரும் மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி தலைமையி லான அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் தன்பாலின உறவு வைத்துக் கொள்வது 377-வது சட்டப்பிரிவின்படி கிரிமினல் குற்றம். இதற்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப் படும். “தன்பாலினத்தவர்கள் சம்மதத்துடன் உறவு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்ற மாகாது” என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2009-ல் தீர்ப் பளித்தது. மேலும், 377-வது சட்டப் பிரிவு செல்லாது. அது சட்ட விரோதமானது என்றும் கூறியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசா ரித்து, ‘தன்பாலின உறவு கிரிமினல் குற்றம்தான்’என தீர்ப்பளித்தது.
இதையடுத்து, தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய கோரி பலதரப் பினரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தன்பாலின உறவு கிரிமினல் குற்றம் என உச்ச நீதிமன்றம் 2013-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் பட்டது. இது 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு கடந்த பிப்ரவரி மாதம் மாற்றப்பட்டது.
இந்நிலையில், செஃப் ரிது டால்மியா, ஹோட்டல் உரிமை யாளர் அமன் நாத், நடன கலைஞர் என்.எஸ்.ஜோஹர் உள்ளிட்ட பிரபலங்கள், தன்பாலின உறவு தங்களின் பாலின உரிமை, உயிர்வாழ்வதற்கான அடிப்படை உரிமையின் ஓர் அங்கம் எனக் கூறி, புதிதாக மனுக்களை தாக்கல் செய்தனர். இம்மனுக்களை விசா ரித்த நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, அசோக் பூஷண் ஆகியோரடங் கிய அமர்வு, இவ்வழக்கை தலைமை நீதிபதி தலைமை யிலான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
அப்போது, மூத்த வழக்கறிஞர் அர்விந்த் தடார், இம்மனுக்கள், சீராய்வு மனுவுடன் இணைத்து விசாரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதற்கு நீதிபதிகள், இதுதொடர்பாக தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் தலைமையிலான அமர்வு முன்பு குறிப்பிடும்படி அறிவுறுத்தினர்.