‘இறந்து போன’ பெண் எல்ஐசி அலுவலகம் வந்த கதை: காப்பீடு மோசடியில் சகோதரர் கைது

‘இறந்து போன’  பெண் எல்ஐசி அலுவலகம் வந்த கதை: காப்பீடு மோசடியில் சகோதரர் கைது
Updated on
1 min read

உயிருடன் இருப்பவரை இறந்து விட்டார் என்று மோசடி செய்து அவர் மீதான காப்பீட்டுத் தொகையை அபேஸ் செய்ய முயன்ற நபர் மஹாராஷ்டிரா போலீஸ் கைது செய்துள்ளனர்.

நடந்தது என்ன?

மாஸ்வி தாலுக்காவைச் சேர்ந்தவர் ரங்குபாய் ஜகந்நாத் ஷிர்கே, இவர் எல்.ஐ.சி பாலிசி ஒன்றை எடுத்து அதற்காக மாதாமாதம் பிரிமியம் தொகையைக் கட்டிவந்தார். இந்த பாலிசிக்கு நாமினியாக தன் சகோதரர் பெயரை அவர் சேர்த்திருந்தார்.  இவரது சகோதரர் பெயர் பிரகாஷ் ஸ்ரீபதி மாந்த்ரே ஆகும்.

இந்த காப்பீட்டுத் தொகையை எப்படியாவது திட்டமிட்டு பறித்து விட வேண்டும் என்று சகோதரர் பிரகாஷ் திட்டமிட அவருக்கு அவர் நண்பரும் உதவ முன்வந்துள்ளார்.

இதனையடுத்து உண்மையான பாலிசிதாரரான தன் சகோதரியின் இறப்புச் சான்றிதழை போலியாகத் தயாரித்துள்ளனர். இதன் மூலம் நாமினியான பிரகாஷ் சகோதரியின் காப்பீட்டுத் தொகையைப் பெற முயன்றுள்ளார்.

ஆனால் சகோதரர் பிரகாஷ் ஸ்ரீபதியின் துரதிர்ஷ்டம் சகோதரி ரங்குபாய் எல்.ஐ.சி. அலுவலகத்துக்கு தன் பாலிசி நிலை குறித்து விசாரிக்க வந்து விட்டார். எல்.ஐ.சி அதிகாரிகள் இவரைக் கண்டதும் அதிர்ந்து விட்டனர்.

காரணம் இறப்புச் சான்றிதழ் கொடுக்கப்பட்ட நபர் நேரில் வந்ததையடுத்து மோசடி நடைபெற்றுளது தெரியவந்தது.

இதனையடுத்து எல்.ஐ.சி மேலாளர் கிரிமினல் புகார் கொடுத்தார்.  ஆனால் ஒருவரும் கைது செய்யப்படாமல் போலீஸ் அலட்சியம் காட்டியது.

அப்போது எஸ்.பி.ஆனந்த்ராவ் கோப்ரே அலட்சியம் கண்டு அதிருப்தியடைந்து உதவி போலீஸ் ஆய்வாளர் மகேந்திர நிம்பால்கரை அழைத்து மேலும் விசாரித்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து சகோதரர் பிரகாஷ் அவரது நண்பர் ஆகியோரை போலீஸார் மறைமுகமாகக் கண்காணித்து கடைசியில் இருவரையும் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in