யூடியுப்பை பார்த்து வீட்டிலேயே பிரசவிக்க முயன்ற கர்ப்பிணி, குழந்தை உயிரிழப்பு

யூடியுப்பை பார்த்து வீட்டிலேயே பிரசவிக்க முயன்ற கர்ப்பிணி, குழந்தை உயிரிழப்பு
Updated on
1 min read

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள பிலாந்த்பூர் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு வீட்டிலிருந்து நேற்று காலை ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது.

இதுகுறித்து அந்தக் குடியிருப்பு உரிமையாளரிடம் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த உரிமையாளர், அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது, அங்கு வாடகைக்கு வசித்து வந்த இளம்பெண் ஒருவர், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதையும், அவர் அருகில் உயிரிழந்த நிலையில் ஆண் சிசு ஒன்றுஇருப்பதையும் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர், இதுதொடர்பாக அவர் போலீஸுக்கு தகவல் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, அங்கு போலீஸார் சென்று சோதனை நடத்தினர். அப்போது, அந்த பெண், யூ டியூபில் வீடியோவை பார்த்து, வீட்டிலேயே பிரசவிக்க முயன்றிருப்பது தெரியவந்தது. இந்த முயற்சியில் ரத்தப் போக்கு அதிகமாகி அவரும், அவருக்கு பிறந்த ஆண் குழந்தையும் இறந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில், போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அந்த இளம்பெண் திருமணம் ஆகாமலேயே கர்ப்பானதும், இது வெளியே தெரிந்துவிடக் கூடாது என்ற அச்சத்தின் காரணமாக, வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றதும் தெரியவந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in