

விஜயவாடா அருகே தெலங்கானா அரசுப் பேருந்து ஒன்று நேற்று தீப்பற்றி எரிந்தது. இதில் 45 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தெலங்கானா அரசுப் பேருந்து ஒன்று ஹைதராபாத்தில் இருந்து நேற்று காலையில் விஜயவாடா நோக்கி வந்துகொண்டிருந்தது. இதில் 45 பயணிகள் இருந்தனர். இந்நிலையில் கிருஷ்ணா மாவட்டத்தில் இப்ரஹிம்பட்டினம் ஜூபுடி இடையே பேருந்து வரும்போது இன்ஜின் பகுதியில் திடீரென புகை கிளம்பியது.
இதனால் பயணிகள் அச்சமடைந்து கூச்சலிட்டதால் சாலையோரம் பேருந்து நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக இறங்கினர். இதனிடையே பேருந்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் பேருந்து நிறுத்தப்பட்டதால் 45 பயணிகளும் தப்பினர். இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பற்றியதாக, போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.