

மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட 7 சதவீத அக விலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
இதன் மூலம் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 50 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன டைவார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற் கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படுகிறது. இப்போது அடிப்படை சம்பளத்தில் 100 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இனி அது 107 சதவீதமாக இருக்கும்.
6-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப் படையில் அகவிலைப்படி உயர்த் தப்பட்டது. ஜூலை 2013-ம் ஆண்டு முதல் ஜூன் 2014 வரை சராசரி பணவீக்கம் 7.25 சதவீதமாக இருந்தது. இதன் அடிப்படையில் அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டது.