ஸ்ரீகாளஹஸ்தி பக்தர்களிடம் நூதன முறையில் திருட்டு

ஸ்ரீகாளஹஸ்தி பக்தர்களிடம் நூதன முறையில் திருட்டு
Updated on
1 min read

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில்,பக்தர்களுக்கு டீ-யில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை, பணத்தை கொள்ளையடித்த பெண்ணை பக்தர்கள் கையும் களவுமாக பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

கோயில் வளாகத்தில் டீ கடை நடத்தி வரும் பெண் ஒருவர், சில பெண்களுக்கு டீ-யில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். மயங்கி விழுந்த பெண்களிடமிருந்த பணம், நகை போன்றவற்றை அபகரித்துள்ளார். இதுகுறித்து காளஹஸ்தி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அந்தப் பெண்ணை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in