விஷத்தைக் கக்கும் யோகி ஆதித்யநாத்: காங்கிரஸ் பிரமுகர் தாக்கு

விஷத்தைக் கக்கும் யோகி ஆதித்யநாத்: காங்கிரஸ் பிரமுகர் தாக்கு
Updated on
1 min read

மக்களுக்காக எவ்வித நல்வார்த்தையையும் பேசாமல் எப்போதும் விஷத்தைக் கக்குவர்தான் யோகி ஆதித்யநாத் என சாடியுள்ளார் உத்தரப் பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷீத் ஆல்வி.

கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய ஆல்வி, "தலை முதல் வால் வரை விஷம் பரவி இருக்கும் ஜந்துகூட யோகி முன் வந்து நிற்க அஞ்சும். காரணம் எப்படி ஒரு மனிதன் தன்னைவிட விஷம் நிறைந்தவராக இருக்க முடியும் என்று அஞ்சும்.

யோகி ஆதித்யநாத் மீது குறைந்தது 13 கிரிமினல் வழக்குகளாவது இருக்கின்றன. இவற்றில் கொலை முயற்சி, மதக்கலவரத்தை தூண்டுதல் போன்ற வழக்குகளும் உள்ளன.மக்களுக்காக எவ்வித நல் வார்த்தையையும் பேசாமல் எப்போதும் விஷத்தை கக்குவர்தான் யோகி ஆதித்யநாத்" என்றார்.

சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி குறித்து கூறும்போது, "சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைக விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை. 80 தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிட்டு வெல்வோம்" என்றார் ஆல்வி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in