நம்பி நாராயணன், மோகன்லாலுக்கு பத்ம பூஷண், 112 பேருக்கு பத்ம விருதுகள்: பங்காரு அடிகளார், மதுரை சின்ன பிள்ளைக்கு பத்மஸ்ரீ

நம்பி நாராயணன், மோகன்லாலுக்கு பத்ம பூஷண், 112 பேருக்கு பத்ம விருதுகள்: பங்காரு அடிகளார், மதுரை சின்ன பிள்ளைக்கு பத்மஸ்ரீ
Updated on
1 min read

குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீவிருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தினத்துக்கு முந்தைய தினம் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டன.

4 பேருக்கு பத்ம விபூஷண், 14 பேருக்கு பத்ம பூஷண், 94 பேருக்கு பத்ம ஸ்ரீஉட்பட மொத்தம் 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 21 பேர் பெண்கள். ஒருவர் திருநங்கை, 11 பேர் வெளிநாட்டினர்.

மகாராஷ்டிராவை சேர்ந்த திரைப்பட பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் நாராயணனுக்கும் பத்ம ஸ்ரீவிருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், நடிகர் பிரபுதேவா ஆகியோருக்கும் பத்மஸ்ரீவிருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in