

காந்திநகர்: தீபாவளிப் பண்டிகையைக் குடும்பத்தினருடன் விமரிசையாகக் கொண்டாடும் வகையில், மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 60 வயதைக் கடந்த 103 முதியவர்கள் மற்றும் 40 பெண் கைதிகள் என மொத்தம் 143 தகுதியுள்ள கைதிகளுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநில துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்கவியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த பரோலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிறை சீர்திருத்தம் மற்றும் கைதிகள் நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக குஜராத் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.