சத்தீஸ்கரில் 2 என்கவுன்ட்டரில் 14 நக்சலைட்கள் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் 2 என்கவுன்ட்டரில் 14 நக்சலைட்கள் உயிரிழப்பு
Updated on
1 min read

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரின் சுக்மா மாவட்​டத்​தின் கிஸ்​தா​ரம் பகு​தி​யில் நக்​சலைட் நடமாட்​டம் இருப்​ப​தாக கிடைத்த தகவலின் அடிப்​படை​யில் பாது​காப்பு படை​யினர் அங்கு தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

நேற்று காலை​யில் அவர்​களை நோக்கி நக்​சலைட்​கள் துப்​பாக்​கி​யால் சுட்​டனர். இதையடுத்து அங்கு இரு தரப்​பிலும் கடும் மோதல் ஏற்​பட்​டது. இதில் 12 நக்​சலைட்​கள் கொல்​லப்​பட்​டனர். இறந்​தவர்​களில் நக்​சலைட் மூத்த தலை​வ​ரான கொண்டா பகுதி குழு​வைச் சேர்ந்த சச்​சின் மங்​டு​வும் அடங்​கு​வார் என நம்​பப்​படு​கிறது. மேலும் கொண்​டா​வில் கூடு​தல் எஸ்​.பி. ஆகாஷ் கிர்​புஞ்சே கொலைக்கு காரண​மாக நக்​சலைட் கமாண்​டரும் இதில் கொல்​லப்​பட்​ட​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.

இதுகுறித்து சுக்மா எஸ்​.பி. கிரண் சவான் கூறுகை​யில், “காட்​டிலிருந்து பாது​காப்பு படை​யினர் திரும்​பிய பிறகே நக்​சலைட் உடல்​களை முறை​யாக அடை​யாளம் காண முடி​யும். என்​க​வுன்ட்​டரில் இறந்த நக்​சலைட் உடல்​களை தேடும் பணி தொடர்​கிறது. இதில் உயி​ரிழந்த நக்​சலைட் எண்​ணிக்கை அதி​கரிக்க வாய்ப்​புள்​ளது” என்​றார்.

சம்பவ இடத்​திலிருந்து ஏகே-47 மற்​றும் இன்​சாஸ் ரக துப்​பாக்​கி​களை பாது​காப்பு படை​யினர் மீட்​டுள்​ளனர். சத்​தீஸ்​கரில் நேற்று மற்​றொரு சம்​பவ​மாக, பிஜாப்​பூர் மாவட்​டத்​தில் நடை​பெற்ற என்​க​வுன்ட்​டரில் 2 நக்​சலைட்​கள் கொல்​லப்​பட்​டனர். சம்பவ இடத்​திலிருந்து இரு துப்​பாக்​கி​கள் கைப்​பற்​றப்​பட்​டன.

சத்தீஸ்கரில் 2 என்கவுன்ட்டரில் 14 நக்சலைட்கள் உயிரிழப்பு
குடியரசுத் தலைவர், பிரதமரின் ஏஐ வீடியோ வெளியிட்டவர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in