வாராணசியில் அசைவ உணவுடன் கங்கை நதியில் படகில் சென்று இப்தார் நடத்திய 14 முஸ்லிம்கள் கைது

வாராணசியில் அசைவ உணவுடன் கங்கை நதியில் படகில் சென்று இப்தார் நடத்திய 14 முஸ்லிம்கள் கைது
Updated on
1 min read

புதுடெல்லி: உ.பி.​யின் வாராணசி, மதன்​புரா பகு​தி​யில் முஸ்லிம்கள் அதிக எண்​ணிக்​கை​யில் வசிக்​கின்​றனர். இங்​குள்ள 14 முஸ்​லிம் இளைஞர்​கள், கடந்த 16-ம் தேதி மாலை கங்கை நதியின் ராஜேந்​திர பிர​சாத் கரைக்கு சென்​றனர்.

படகில் கங்​கை​யின் மையப் பகு​திக்கு சென்று அங்கு ரமலான் மாத நோன்பை முடிப்​பது அவர்​களின் நோக்​க​மாக இருந்​துள்​ளது. இதற்​காக கோழி பிரி​யாணி உள்​ளிட்ட அசைவ உணவு​களை​யும் தங்​களு​டன் கொண்டு சென்​றனர். கரையில்​ இருந்து தனி​யார் மோட்​டார் படகை வாடகைக்கு எடுத்​துச் சென்ற அவர்​கள், கங்​கை​யில் ரம்​ஜான் நோன்​பின் இப்​தார் முடித்​தனர். மேலும் இதை செல்​போனில் வீடியோ​வாக பதிவு செய்து அதை சமூக வலை​தளங்​களில் வைரலாக்​கினர்.

இது தொடர்​பாக வாராணசி பாஜக இளைஞர் அணி தலை​வர் ரஜத் ஜெய்​ஸ்​வால், நகர காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அப்​பு​காரில், ”தா​யாக கருதப்​படும் கங்​கை​யில் நடத்​திய இப்தாரினால் சனாதன தர்​மத்தை பின்​பற்​றும் இந்​துக்​கள் மனம் புண்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதற்கு காரண​மானவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்லை எனில் மத நல்​லிணக்​கம் சீர்குலை​யும்” என்று கூறி​யிருந்​தார்.

இதையடுத்து காட்​சிப் பதிவை ஆய்வு செய்த போலீ​ஸார், மதன்​பு​ராவை சேர்ந்த 14 இளைஞர்​களை​யும் கைது செய்து சிறைக்கு அனுப்​பினர். படகு விதி​களை படகோட்டி மீறியது தெரிய வந்​தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என போலீ​ஸார் தெரிவித்துள்​ளனர்.

இது குறித்து வாராணசி காவல் துறை உதவி ஆணை​யர் விஜய் பிர​தாப் சிங் கூறுகை​யில், ”புனித நகர​மான வாராணசி​யில் ஓடும் கங்கை நதி​யும் இந்​துக்​களின் புனித நதி​யாகக் கருதப்​படு​கிறது. வைரலான காட்​சி​யில் அந்த இளைஞர்​கள் கோழி பிரி​யாணியை சாப்​பிட்​டு​விட்டு அதன் எலும்​பு​களை கங்​கை​யில் வீசுவதும் தெளிவாகப் பதி​வாகி உள்​ளது. எனவே இது உள்​நோக்​கத்​துடன் செய்​யப்​பட்​டதா என வி​சா​ரித்​து வரு​கிறோம்​” என்​றார்​.

வாராணசியில் அசைவ உணவுடன் கங்கை நதியில் படகில் சென்று இப்தார் நடத்திய 14 முஸ்லிம்கள் கைது
போர்ச் சூழலிலும் தங்கம் விலை தொடர்ந்து சரிவது ஏன்? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in