

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த திங்கட்கிழமை மாலை கார் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், தென்மேற்கு டெல்லியின் மகாபால்பூரில் உள்ள ராடிசன் அருகே வெடிகுண்டு வெடித்தது போன்ற பலத்த சத்தம் கேட்டதாக காலை 9.19 மணிக்கு டெஹி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. எனினும் விரிவான சோதனைக்கு பிறகும் சம்பவ இடம் எதையும் தீயணைப்பு வீரர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், தவுலா குவான் நோக்கிச் சென்ற டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்தின் பின்புற டயர் வெடித்ததாகவும், அதிலிருந்து சத்தம் வந்ததாகவும் தெரியவந்தது.
“தற்போது அங்கு இயல்பு நிலை உள்ளது. கவலைப்பட ஏதுமில்லை” என்று டெல்லி காவல் துறை துணை ஆணையர் (தென் மேற்கு) அமித் கோயல் கூறினார்.