கல்லூரி, பல்கலை. வளாகங்களில் நொறுக்குத் தீனிகள் விற்க தடை: பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு

கல்லூரி, பல்கலை. வளாகங்களில் நொறுக்குத் தீனிகள் விற்க தடை: பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு
Updated on
1 min read

நொறுக்குத் தீனி உணவுகளை (ஜங்க் புட்) கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் விற்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: நொறுக்குத் தீனி உணவு வகைகளை மாணவ, மாணவிகள் சாப்பிடுவதால் அவர்களின் ஆரோக்கியம் கெடுகிறது. மேலும் அவர்கள் உடல் எடையும் அதிகரித்து விடுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு பல்வேறு நோய்களும் இது போன்ற உணவு வகைகளால் வருகின்றன. குறிப்பாக இந்த வகை உணவுகளால் அவர்களின் எடை அதிகரித்து பாதிக்கப்படுகின்றனர்.

இதைத் தடுக்கவே கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் ஜங்க் புட் உணவுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மத்திய மனித வளத்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த உத்தரவின்பேரில் இந்தத் தடையை அமல்படுத்துகிறோம்.இந்த உத்தரவை அனைத்து கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in