ஒடிசா அரசு தகவல் தொடர்புகளில் ‘ஹரிஜன்’ வார்த்தையை பயன்படுத்த தடை

ஒடிசா அரசு தகவல் தொடர்புகளில் ‘ஹரிஜன்’ வார்த்தையை பயன்படுத்த தடை
Updated on
1 min read

புவனேஸ்வர்: ஒடிசா எஸ்டி, எஸ்சி மேம்பாட்டுத் துறை ஆணையர் மற்றும் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், “அரசியலமைப்பின் 341-வது பிரிவில் அறிவிக்கப்பட்டபடி, பட்டியலின சமூகத்தினரை ஆங்கிலத்தில் எஸ்சி எனவும் ஒடியாவில் ‘அனுசுசித ஜாதி’ எனவும் குறிப்பிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் ஆணையர் மற்றும் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “ஹரிஜன் என்ற சொல் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளிலும் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in