மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு 3 ஆயுள், ரூ.3 லட்சம் அபராதம்

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு 3 ஆயுள், ரூ.3 லட்சம் அபராதம்
Updated on
1 min read

இடுக்கி: கேரளாவில் காரிமனூர் அருகே உள்ள வாடகை வீட்டில் தனது மைனர் மகளை மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார் தந்தை. இந்தநிலையில், அந்த சிறுமி 8 வயதாக இருந்தபோது வயிற்றுவலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தனது தாயிடம் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார்.

சிறுமியின் வாக்குமூலத்தின்படி, அவள் 1-ம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே தந்தை தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு. இடுக்கி விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் விரைவு நீதிமன்ற நீதிபதி மஞ்சு.வி. வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது: பெற்ற குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும். மேலும், ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

அந்த தொகையை அவர் தனது மகளுக்கு வழங்க வேண்டும். அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in