பி-2 விமான வடிவமைப்புக்கு உதவிய இந்தியர்: உளவு பார்த்த வழக்கில் சிறையில் இருப்பவரின் பின்னணி

கவுடியா, பி-2 விமானம்
கவுடியா, பி-2 விமானம்
Updated on
2 min read

புதுடெல்லி: உலகின் மிகச் சிறந்த போர் விமான​மாக அமெரிக்​கா​வின் பி-2 விமானம் கருதப்​படு​கிறது. மொத்​தம் 172 அடி அகலம், 69 அடி நீள​முடைய இந்த விமானத்தை ரேடாரில் கண்​டறிய முடி​யாது. அணு குண்​டு​களை சுமந்து செல்​லும் திறன் கொண்​டது. தொடர்ந்து 11,000 கி.மீ. வரை தரை​யிறங்​காமல் பறக்​கும். இந்த பி-2 ரகபோர் விமானங்​கள் வேறு எந்த நாட்​டிட​மும் இல்​லை, அந்​தளவுக்கு உலகிலேயே மிக சக்தி வாய்ந்த பி-2 ரக விமான வடிவ​மைப்​பில் இந்​தி​யர் ஒரு​வர் உதவி செய்​து, பின்​னர் உளவு பார்த்த வழக்​கில் சிறை தண்​டனை பெற்​றுள்​ளார். ஈரான் மீது பி-2 விமானம் தாக்​குதல் நடத்​திய நிலை​யில், தற்​போது அவருடைய தகவல்​கள் மீண்​டும் வலம் வந்​துள்​ளன.

அதன் விவரம் வரு​மாறு:கடந்த 1944-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் 11-ம் தேதி மும்​பை​யில் பிறந்​தவர் நோஷிர் ஷெரி​யார்ஜி கவுடி​யா. பார்சி குடும்​பத்​தில் பிறந்த கவுடியா சிறு வயதிலேயே மிக​வும் புத்​தி​சாலி​யாக இருந்​தார். தனது 15-வது வயதிலேயே பிஎச்​.டி பட்​டத்​துக்கு நிக​ரான பட்​டம் பெற்​றுள்​ளார். அதன்​பிறகு 19-வது வயதில் ஏரோ​நாட்​டிக்​கல் இன்​ஜினீயரிங் படிப்​ப​தற்​காக அமெரிக்கா​வுக்கு சென்​றுள்​ளார்.

பின்​னர் வெர்​ஜினி​யா​வில் உள்ள நார்த்​ராப் என்ற நிறு​வனத்​தில் பணி​யில் சேர்ந்​தார். இந்த நிறு​வனம் விண்​வெளி கருவி​கள் மற்​றும் ஆயுதங்​களை உற்​பத்தி செய்து வந்​தது. அங்​கு​தான் பி-2 விமான வடிவ​மைப்​பில் கவுடியா ஈடு​பட்​டுள்​ளார். குறிப்​பாக பி-2 விமானத்​தின் உந்து சக்தி பிரிவுக்கு உதவியுள்ளார்.

பின்​னர் நார்த்​ராப் நிறு​வனத்​தில் இருந்து விலகி சொந்​த​மாக பாது​காப்​புத் ஆலோ​சனை நிறு​வனத்தை தொடங்கி உள்​ளார். அவர் லாஸ் அலமோஸில் அமெரிக்க உளவு நிறு​வனம் சிஐஏ விமானங்​கள் மற்​றும் அணு ஆயுதங்​கள் குறித்து ஆலோ​சனை வழங்கினார்.

மேலும் 1999-ம் ஆண்​டு, என்​.எஸ் கவுடியா என்ற பெயரில் நிறு​வனத்​தைத் தொடங்​கி​னார். நிறு​வனத்​தின் திட்​டங்​களை செயல்​படுத்த நிறைய பணம் தேவைப்​பட்​ட​தால், வெளி​நாடு​களில் இருந்து வாடிக்​கை​யாளர்​களை தேடி​னார். அப்​போது​தான் அவர் சீனா​வுடன் தொடர்பை ஏற்​படுத்​தி​னார்.

மூன்று முறை சீனா​வுக்கு சென்று வந்த கவுடி​யா, பி-2 விமானத்​துக்​குப் பயன்​படுத்​தும் உந்து சக்தி பற்​றிய தகவல்​களை வழங்கி உள்​ளார். அந்த தகவல்​களை வைத்து ரேடாரில் சிக்​காத போர் விமான தயாரிப்​பில் சீனா ஈடு​பட்​டது. அப்​போது கவுடி​யா​வுக்கு ஒரு லட்​சத்து 10 ஆயிரம் அமெரிக்க டாலரை சீனா வழங்​கிய​தாக கூறப்​படு​கிறது.

அடுத்த சில ஆண்​டு​களில் அமெரிக்​கா​வின் பி-2 விமானத்தை போலவே சீன விமான தளங்​களில் போர் விமானம் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்​ததை செயற்​கைக் கோள்​கள் புகைப்​படம் எடுத்து காட்​டின. இது பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. அதன்​பின் உஷா​ரான அமெரிக்க புல​னாய்வு அமைப்பு எப்​பிஐ, ஹவா​யில் தங்​கி​யிருந்த கவுடி​யாவை கடந்த 2005-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் 26-ம் தேதி கைது செய்​தது.

அவர் மீது தேசிய பாது​காப்பு ரகசி​யங்​களை வெளி​நாடு​களுக்கு விற்​றது, ஆயுதங்​கள் ஏற்​றுமதி கட்​டுப்​பாடு சட்​டத்தை மீறியது, உளவு பார்த்​தது போன்ற 14 குற்​றச்​சாட்​டு​கள் சுமத்​தப்​பட்​டன. இந்த வழக்​கு​களில் கவுடி​யா​வுக்கு கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி 32 ஆண்டு சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டது. தற்​போது அவர் அமெரிக்​கா​வின் கொல​ராடோ​வின் பிளாரன்ஸ் சிறை​யில் தண்​டனை அனுப​வித்து வரு​கிறார். அவருக்கு வயது 81 ஆகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in