உத்​த​ராகண்​டில்​ க​னமழை, நிலச்​சரி​வால்​ 6 கி.மீ. தூரத்​துக்​கு போக்​கு​வரத்​து நெரிசல்​

உத்​த​ராகண்​டில்​ க​னமழை, நிலச்​சரி​வால்​ 6 கி.மீ. தூரத்​துக்​கு போக்​கு​வரத்​து நெரிசல்​
Updated on
1 min read

டேராடூன்​: உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில் இது போக்குவரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாரி தேவி கோயிலில் இருந்து பத்ரிநாத் செல்லும் நெடுஞ்சாலையில் நேற்று மாலை 6 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பது கூகுள் ரியல்டைம் வரைபடம் மூலம் தெரியவந்தது. இந்த சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த என்எச்-7 தேசிய நெடுஞ்சாலைதான் ரிஷிகேஷ், தேவ்பிரயாக், ருத்ரபிரயாக், சமோலி, ஜோஷிமாத், பத்திரிநாத் உள்ளிட்ட பல புனித நகரங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.

எனவே, இங்கு நிலச்சரிவு ஏற்பட்டு நேற்று வாகனங்கள் பல கி.மீ. தூரத்துக்கு வரிசை கட்டி நின்றதால் சுற்றுலா பயணிகளின் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.

மலைப் பகுதியை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலைகளில் ஜேசிபி உதவியுடன் இடிபாடுகளை அகற்றி போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மேற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தான் முழுவதும் மே 27 வரை புழுதிப் புயலும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் ஆலங்கட்டி மழையும் பெய்யும் என்றும் வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in