தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் வீரர் உயிரிழப்பு

தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் வீரர் உயிரிழப்பு
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டம், ஷிங்போரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் நேற்று காலையில் சுற்றி வளைத்தனர்.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். கெய்கர் சந்தீப் பாண்டுரங் என்ற இந்த வீரர் மகாராஷ்டிர மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த மோதலில் மேலும் இரு வீரர்கள் காயம் அடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு கூடுதல் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தீவிரவாதிகளுடன் சண்டை நீடிப்பதாக ராணுவ அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in